அழியா மை விநியோகிப்பாளர் என நேற்று நாடாளுமன்றத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட Integrated Challenger (M) Sdn Bhdன் அலுவலகத்திற்குச் சென்ற பல நிருபர்களைச் சந்திக்க அதன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
நிறுவனத் தேடலில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் மலேசியாகினி ஷா அலாம், செக்சன் 9ல் உள்ள அலுவலகக் கட்டிடம் ஒன்றில் இயங்கும் அந்த அழியா மை விநியோகிப்பாளருடைய அலுவலகத்துக்கு நேற்று பிற்பகல் மணி 2.00 வாக்கில் மலேசியாகினி சென்றது.
அந்த நிறுவனப் பகுதியில் பெயர் பட்டைகள் ஏதும் காணப்படவில்லை. அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவருடன் மலேசியாகினி நிருபர் தொடர்பு கொண்டு பேச முடிந்தது. ஆனால் அந்த ஊழியர் அடையாளம் காட்ட விரும்பாமல் intercom வழியாகப் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.
அந்த நிறுவனத்தின் இயக்குநரான நோர்ஷியா யூசோப் அங்கு இல்லை என்றும் வெளியில் வேலையாகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் பெறுவதற்காக நோர்ஷியா மற்றும் இதர நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களுடைய விவரங்களைத் தருவதற்கும் அந்த ஊழியர் மறுத்து விட்டார்.
ஒரு மணி நேரம் காத்திருந்தும் நோர்ஷியாவும் இதர ஊழியர்களும் வரவே இல்லை
மற்ற ஊடகங்களைச் சேர்ந்த இரண்டு நிருபர்களும் அங்கு வந்தனர். அந்த நிறுவனத்தின் ஒர் இயக்குநரான முகமட் சாலே முகமட் அலி குறித்த தகவல்களைப் பெற அவர்கள் விரும்பினர்.
அந்த முகமட் சாலே, தேர்தல் ஆணையத்துடன் தொடர்புடையவர் என
மக்களவையில் பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பம்! அப்படித்தான் இருக்கும்! இன்னும் கொஞ்ச நாளில் நிருபர்கள் அனைத்தையும் நோண்டி எடுத்து விடுவார்கள்! பொறுத்திருப்போம்!
அந்த நிறுவனத்தின் இயக்குநரான நோர்ஷியா யூசோப் அங்கு இல்லை… உண்மையில் மாடுகள் குடியிருக்கும் பங்சார் அப்பர்ட்மெண்ட்டில் சென்று பாருங்கள்….ஒருகணம் அங்கு தங்குவதற்கு தற்காலிகமாக இடம் கொடுத்திருப்பார்கள்……..