டாக்டர் சுப்ரமணியம்: மத்திய செயற்குழு மாற்றங்கள் ‘கேள்விக்குரியன’

1 subraமஇகா  மத்திய செயற்குழுவிலிருந்து எஸ்.வேள்பாரியும் புத்ரி தலைவர் உஷா நந்தினியும் நீக்கப்பட்டது பற்றிக் கருத்துரைத்த கட்சித் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், “அது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டிருந்தால் நல்லதுதான். ஆனால், சந்தேகத்துக்குரிய வேறு நோக்கங்கள் இருக்குமானால் அதை ஆராய வேண்டியதுதான்”, என்றார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரமணியம், இவ்வாறு கூறினார்.

ஆனால், இது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல என்று கூறிய அவர், மத்திய செயற்குழுவில் யார் இருக்கலாம், யார் இருக்கக்கூடாது என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் கட்சித் தலைவருக்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார்.