புவா: இதயம் என்பதே இல்லையா அரசாங்கத்துக்கு?

1 puaஏழு மாதங்களில் 11 பேர் போலீஸ் தடுப்புக்காவலில் இறந்துபோன பிறகும்  போலீஸ் புகார்கள் மற்றும் தப்பான நடத்தைமீது விசாரணை ஆணையம் (IPCMC) அமைப்பது தேவைதானா என்று வாதமிட்டு வருவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் டிஏபி எம்பி டோனி புவா.

“போலீஸ் காவலில் மலேசியர்கள் இறந்துபோவதைக் கண்டும் அதற்கெதிராக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கும் அளவுக்கு நஜிப் அரசு இதயமற்றதா என்று கேட்கத் தோன்றுகிறது”, என அந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி ஓர் அறிக்கையில் கூறினார்.

பத்து காஜாவில் போலீஸ் காவலில் இருந்த  சியு சியாங் கேப்,26, இறந்து போனது பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.