தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சே-இன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், அரசாங்கம் வாக்காளர் பட்டியலில் “எதுவும் மூடி மறைக்கப்படவில்லை” என்பதை நிரூபிக்க 1958 தேர்தல் சட்டம் பிரிவு 9ஏ-யை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அது நீக்கப்பட்டால் தேர்தல் ஆணையம் “திருப்தியற்ற” விளக்கங்களைக் கூறிக்கொண்டிருக்க முடியாது.
“9ஏ, இசியை வாக்காளர் பட்டியலின் ஏகபோக காப்பாளர் ஆக்குகிறது.
“வாக்காளர் பட்டியல் பற்றி நாம் என்ன கேட்டாலும் இசி மனநிறைவளிக்காத பதிலைச் சொல்லிக்கொண்டிருக்கும் நாமும் எதுவும் செய்ய இயலாது.
“அதை நீதிமன்றத்துக்கும் கொண்டுசெல்ல முடியாது”. இன்று நாடாளுமன்ற வளாகத்தில், பக்காத்தான் எம்பிகள் மூவர் இணையத்தில் தொடங்கியுள்ள “9ஏ-யை அகற்றுவீர்” இயக்கத்துக்கு ஆசிகூறி தொடக்கிவைத்தபோது அம்பிகா இவ்வாறு கூறினார்.