சுல்கிப்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத ஏஜி மீது போலீசில் புகார்

1 ngoஎன்ஜிஓ-களின் கூட்டமைப்பு ஒன்று, சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுத்த முறையில் வழக்கு தொடுக்கிறார் என்று போலீசில் புகார் செய்தது.

வலைப்பதிவர்கள் அல்வின் டானுக்கும் விவியன் லீ-க்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாததும் தேர்ந்தெடுத்த முறையில் வழக்கு தொடுக்கப்படுவதற்குச் சான்றுகளாகும் என  மக்கள் நல, உரிமை காப்பு அமைப்பின் தலைவர் எஸ்.கோபி கிருஷ்ணன் கூறினார்.

“வலைப்பதிவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டதை வரவேற்கிறோம். ஏனென்றால் யாரும் எந்தவொரு சமயத்தையும் இழிவுபடுத்தக்கூடாது. ஆனால்,(சமயங்களை இழிவுபடுத்தும்) எல்லா விவகாரங்களிலும் ஏஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றாரவர்.