நிருபர்களுக்கு எதிரான வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுகின்றவர்கள், தமக்கு மிரட்டல்களை விடுத்தவர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டுவதில் போலீசார் ‘செயலற்றுப் போவது’ குறித்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
மே 5ம் தேதி நடந்த 13வது பொதுத் தேர்தலில் தேர்தல் மோசடிகள் எனக் கூறப்படுவது மீது நாடு முழுவதும் நிகழ்ந்த ‘505 கறுப்பு தின’ பேரணிகளில் பங்கு கொண்ட எதிர்த்தரப்பு (பக்காத்தான் ராக்யாட்) தலைவர்கள் மீது – விரைவாக- இரண்டு மாதங்களுக்குள் குற்றம் சாட்டும் கூட்டரசு அரசாங்கம், சட்டத்துறைத் தலைவர் ஆகியோர் பின்பற்றும் இரட்டைத் தரங்கள் ‘மிகவும் அப்பட்டமானவை’ என லிம் சொன்னார்.
“ஆனால் பிஎன் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவங்களில் புலனாய்வுகள் தாமதப்படுத்தப்படுவதோடு ‘மேல் நடவடிக்கை இல்லை’ என்ற முத்திரையும் குத்தப்பட்டுவதாக லிம் ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த டி.ஏ.பி. காரன்கள் மட்டும் என்ன உண்மையானவர்களா, நேர்மையானவர்களா? இவர்கள் மட்டும் என்ன உறுப்பினர்களிடம் பாரபட்சம் காட்டவில்லையா? கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து நவம்பர் வரை உறுப்பினர் என்னும் வகையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது ( தகுந்த ஆதாரங்களோடு )நான் கொடுத்திருந்த நான்கு புகார்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இவர்கள் மற்றவர்களைப்பற்றி அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கிறது. இக்கட்சியிலிருந்து நான் விழகியதற்கு இதுதான் முக்கிய காரணம். இந்த லிம் குவான் எங் மற்றவர்களை குறை சொல்லுவதற்கு முன் தனது கட்சியில் உள்ள குறைபாடுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.