எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் ‘இஸ்ரேல் தேசிய வங்கியில்’ ஒன்பது கணக்குகள் உட்பட 20 வங்கிக் கணக்குகளை வெளிநாடுகளில் வைத்துள்ளதாக கூறிக் கொண்ட பிஎன் சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் தெக் மெங் நாடாளுமன்ற உரிமைகள், சலுகைகள் குழுவுக்கு முன்னர் நிறுத்தப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
லியாங்கை அந்தக் குழுவுக்கு முன்னர் நிறுத்த வேண்டும் என டிஏபி ஜெலுத்தோங் எம்பி ஜெப் ஊய் சமர்பித்த தீர்மானம் மீது இரண்டு மணி நேரம் விவாதம் நடந்த பின்னர் அதற்கு எதிராக 107 எம்பி-க்கள் வாக்களித்தனர்.
லியாங்கை அந்தக் குழுவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு ஆதரவாக 60 எம்பி-க்கள் வாக்களித்தனர்.
அவையைத் தவறாக வழி நடத்தியதற்காக நிரந்தர ஆணை 36(12)ன் கீழ் ஜெப் ஊய் அந்தத் தீர்மானத்தை லியாங்கிற்கு எதிராகக் கொண்டு வந்தார்.