குவான் எங்: இனவாத அமைச்சருக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்

1 limஅமைச்சரவை மலாய் மொழி பைபிளை எரிக்க வேண்டும் என பெர்க்காசா  விடுத்த அறைகூவலை ஆதரித்துள்ள அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து,  தான் பல இனங்களையும் பிரதிநிதிப்பதை நிரூபிக்க வேண்டும் என டிஏபி  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘அல்லாஹ்’ என்ற சொல்லைக் கொண்ட பைபிள்களுக்கு எரியூட்டுமாறு பெர்க்காசா  தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள அறைகூவலை நகர்ப்புற நல்வாழ்வு,  வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான்  நியாயப்படுத்தியிருப்பது ‘இனவாதத் தன்மையைக் கொண்டது’, ‘தீவிரமானது’ என  லிம் சாடினார்.

“இப்ராஹிம் போன்ற இனவாதியும் தீவிரவாதி ஒருவர் பைபிளை எரிப்பது,  பைபிளை திருத்தும் நடவடிக்கை எனச் சொல்வது எப்படிப் பொருத்தமாக இருக்க  முடியும் ?”

“மற்ற சமயங்களுடைய புனித நூல்களை முஸ்லிம் அல்லாதவர்கள் எரிப்பதற்கு  அனுமதிக்கக் கூடாது என்பதைப் போன்று பைபிளை எரிப்பதற்கு இப்ராஹிம்  அலியை குறிப்பாக கிறிஸ்துவ சமயத்துக்கு எதிராக ஆட்சேபிப்பதற்காக அதனைச்  செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது,” என லிம் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.