ஓராங் அஸ்லி அமைப்புகள்: அரசாங்கம் எங்கள் நிலத்தைத் திருடப் பார்க்கிறது

1 asliஅரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து தங்களின்  மூதாதையர் நிலத்தில் 60 விழுக்காட்டைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறது என ஓராங் அஸ்லி அமைப்புகள் இரண்டு  குற்றம் சுமத்தியுள்ளன.

பகாங்கையும் மலாக்காவையும் சேர்ந்த ஒராங் அஸ்லி பிரதிநிதிகள்,  1954 பூர்வீகக் குடிச் சட்டத்துக்குக்  கொண்டுவரப்படும் திருத்தத்துக்கு  எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்திருத்தம்,  அரசாங்கம்  ஓராங் அஸ்லி  நிலத்தைத் தனிப்பட்டவர்களுக்கு பட்டாபோட்டு  சொந்தமாக்குவதை அனுமதிக்கிறது என்று கூறும்  அவர்கள்,  இதனால் வழக்கத்தில் உள்ள இனக்குழு உடைமைமுறை  ஒழிந்து போகும் என்கிறார்கள்.  இதன் விளைவாக பட்டா போட்டு கொடுக்கப்படாத நிலம், அப்படிப்பட்ட நிலம் நிறையவே இருக்கும், மாநில அரசுக்குச் சொந்தமாகிவிடும்.

“இதன்வழி எங்களுக்குச் சொந்தமான 60 விழுக்காட்டு நிலத்தை இழக்க நேரும்”, என ஜாரிங்கான் ஓராங் அஸ்லி பகாங் அமைப்பைச் சேர்ந்த ஷாபி ட்ரிஸ் கூறினார்.