முஹைடின்: முஸ்லிம் அல்லாதாரை மதம் மாற்றுவது Titas நோக்கமல்ல

UMNO-muhyiddinTitas என்ற இஸ்லாமிய ஆசிய நாகரீகங்கள் பாடத்தை உள்நாட்டு தனியார்  உயர்கல்விக் கூடங்களில் கட்டாயமாக்குவது முஸ்லிம் அல்லாத மாணவர்களை  இஸ்லாத்துக்கு மதம் மாற்றாது.

இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார்.

இந்த நாட்டிலுள்ள பல இன, பல சமய மக்களிடையே புரிந்துணர்வை
மேம்படுத்தும் அரசாங்க முயற்சிகளில் ஒன்று அந்தப் பாடம் என முதலாவது  கல்வி அமைச்சருமான அவர் சொன்னார்.

இஸ்லாத்துக்கு முஸ்லிம் அல்லாதாரை மதம் மாற்றும் திட்டமல்ல அது.”

“நீண்ட காலத்துக்கு முன்பே நாங்கள் அந்தப் பாடத்தை பொது உயர்கல்விக்  கூடங்களில் அமலாக்கியுள்ளோம். முஸ்லிம் அல்லாத மாணவர்கள் அந்தப் பாடத்தை எடுத்துள்ள போதிலும் அது பிரச்னையாகவில்லை.”

நேற்றிரவு புத்ரா ஜெயாவில் தமது அதிகாரத்துவ இல்லத்தில் கல்வி அமைச்சின் ஆயிரம் ஊழியர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது முஹைடின் பேசினார்.

கல்வித் துணை அமைச்சர்களான மேரி யாப் காய்ன் சிங், பி கமலநாதன்,
அமைச்சின் தலைமைச் செயலாளர் மடினா முகமட் ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.