13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்த தங்கள் ஆதாரங்களை அனுப்புமாறு பெர்சே அமைத்துள்ள மக்கள் பஞ்சாயத்து மன்றம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களையும் சாட்சிய அறிக்கைகளையும் அவர்கள் அனுப்பலாம்.
வாக்காளர்கள் எதிர்நோக்கிய சூழ்நிலைகள் பட்டியலையும் பெர்சே வெளியிட்டது. அவற்றுள்:
-பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தும் வாக்களிக்க இயலாமல் போனது,
-வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்பட்டது,
-குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க பணம் அல்லது அன்பளிப்புக்கள் கொடுக்க முன் வந்தது,
-ஒருவர் வாக்காளராக பதிவு செய்யவில்லை என்றாலும் பட்டியலில் அவர் பெயர் இருப்பது,
-குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்க மறுத்தால் சலுகைகள் கிடைக்காது என மருட்டப்பட்டது ஆகியவையும் அடங்கும்.
அந்த ஆதாரங்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி
[email protected] என்பதாகும். வரும் ஆகஸ்ட் 16க்குள் அவை அனுப்பப்பட வேண்டும்.
அவசியமானல் நேரடியாகச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என பெர்சே அறிக்கை தெரிவித்தது.
பெர்சே பஞ்சாயத்து மன்றத்தை அமைப்பதற்கு உதவுகின்றதே தவிர அது கூடியதும் அதில் தலையிடாது என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஏற்கனவே கூறியுள்ளார்.