கோலா பெசுட்டிற்கு அருகில் உள்ள கோங் கெடாக்கில் அமைந்துள்ள அரச மலேசிய ஆகாயப் படைப் பள்ளிவாசாலில் நேற்றிரவு தமது Maghrib தொழுகையை நடத்துவதற்கு பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் அனுமதிக்கப்படவில்லை
முன்னாள் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அஜிஸ் அந்தப் பள்ளிவாசலுக்கு ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்ததாக பாஸ் கட்சியின் ஏடான ஹாராக்கா டெய்லி கூறியது.
நிக் அஜிஸ் அங்கு தொழுகை நடத்துவதற்கு முதலில் ஒப்புக்
கொள்ளப்பட்டிருந்ததாக கெராபாட் என்ற அமைப்பின் பேராளர் மேஜர் (ஒய்வு பெற்ற) யூசோப் அலி தெரிவித்தார்.
பாஸ் கட்சி சார்புடைய முன்னாள் ஆயுதப்படை வீரர்களைக் கொண்ட அமைப்பு கெராபாட் ஆகும்.
என்றாலும் கடைசி நேரத்தில் அந்த அனுமதி ரத்துச் செய்யப்பட்டதாக யூசோப் சொன்னார். உயர் நிலையிலிருந்து வந்த உத்தரவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம் என அவர் கருதுகிறார்.
ஏனடா கண்ணா இந்த தீராத விளையாட்டு? தொழும் இடத்திலுமா அரசியல் காட்சிகள் அரங்கேற வேண்டும்? எப்பொழுதுதான் இவர்கள் மாறுவார்களோ தெரியவில்லை.