வத்திகன் மலேசியாவுக்குப் புதிய தூதரை நியமிக்க வேண்டும் எனக் கோரும் ஆட்சேபக் குறிப்பு ஒன்றை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி தலைமையில் சென்ற 30 பேர் கொண்ட குழு ஒன்று கோலாலம்பூரில் உள்ள வத்திகன் தூதரகத்தில் வழங்கியுள்ளது.
ஆனால் அந்தக் குழுவைச் சந்திக்க தூதரக அதிகாரிகள் யாரும் வராததால் இப்ராஹிம் அந்தக் குறிப்பின் பிரதியை அங்கிருந்த போலீஸ் காவலரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது.
அவர் காவல் சாவடி சுவரில் இன்னொரு பிரதியையும் ஒட்டி வைத்தார்.
ஜாத்தி தலைவர் ஹசான் அலியுடன் சென்றுள்ள இப்ராஹிம் நடப்பு வத்திகன் தூதர் பேராயர் ஜோசப் மரினோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டது மட்டும் போதாது எனச் சொன்னார்.
இறைவனைக் குறிப்பதற்குக் கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற அரபுச் சொல்லைப் பயன்படுத்துவதற்கு உள்ளூர் தேவாலயம் ஒன்று மேற்கொண்டுள்ள இயக்கத்தை மரினோ வரவேற்றுள்ளதாகக் கூறப்படுவது மீது பெர்க்காசாவும் இதர முஸ்லிம் அமைப்புக்களும் ஆத்திரமடைந்துள்ளன.
உள்ளூர் தேவாலயம் மட்டும் அல்ல இங்குள்ள கிறிஸ்துவர்களும் அதனை ஆதரிக்கிறார்கள். இது போன்ற பெர்காசாவின் தேவையற்ற சர்ச்சையினால் கிறிஸ்துவர்களும் கொந்தளித்துப் போயிருக்கின்றனர்.