மலேசியா மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான தனது கடமைகளை நிறைவேற்றாமல் போனால் தற்போது அமெரிக்க வெளியுறவுத் துறையின் மனிதக் கடத்தல் ஆய்வறிக்கையில் தற்போது ‘இரண்டாம் கட்டத்தில்’ உள்ள மலேசியாவின் நிலை மேலும் சரியக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
மனிதக் கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசியல் உறுதியும் மலேசியாவில் காணப்படவில்லை எனக் கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தான், ருவாண்டா, லெபனான், கம்போடியா ஆகியவை ‘இரண்டாம் கட்ட’ நிலையில் உள்ள நாடுகளில் அடங்கும்.
அந்த ‘இரண்டாம் கட்ட’ நிலையில் தொடர்ந்து 4வது ஆண்டாக மலேசியா இருந்து வருவதால் அது ‘மூன்றாம் கட்டத்துக்கு’ இயல்பாகவே தாழ்த்தப்படக் கூடும்.
சிரியா, வட கொரியா ஆகியவை ‘மூன்றாம் கட்டத்தில்’ உள்ள நாடுகளில்
அடங்கும். அந்த நிலை அமெரிக்கத் தடைகளுக்கு வழி வகுத்து விடும்.
மனிதக் கடத்தல் பிரச்னையைத் தீர்ப்பதற்கு 2010ம் ஆண்டு மலேசிய அரசாங்கம் பொது மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் அமலாக்க நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்கவும் அரசு சாரா அமைப்புக்களுடன் பேச்சு நடத்தவும் ஐந்தாண்டு திட்டம் ஒன்றை மலேசியா அறிவித்தது.
ஆனால் தேவையான உண்மையான மாற்றங்களை புத்ராஜெயா செய்யவில்லை என மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் தெனாகானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ் தெரிவித்துள்ளார்.