TPPA எனப்படும் பசிபிக் வட்டாரப் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த 14 போராளிகள் இன்று காலை கோத்தா கினாபாலுவில் கைது செய்யப்பட்டனர்.
கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் 18 அம்சங்கள் பற்றிய பேச்சுக்கள் நிகழும் சூத்ரா துறைமுக ஹோட்டலுக்கு வெளியில் கூடிய அவர்கள் கைது செய்யப்பட்டதாக மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் தெரிவித்தது.
அந்த ஹோட்டலுக்கு வெளியில் இன்று காலை மணி 8.30 வாக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் காராமுன்சிங் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் மூவர் அந்த போலீஸ் தலைமையகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்யப்பட்டனர்
மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முயலுவதாக போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்த சுவாராம் தெரிவித்தது.