நிறைய பணம் வைத்துள்ள திரெங்கானு அரசுக்கு அப்பணத்தைச் செலவு செய்யத் தெரியவில்லை என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சாடினார்.
பணம் தேவையற்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதாக நேற்றிரவு கோலா பெசுட்டில் ஒரு செராமாவில் ரபிஸி கூறினார்.
எண்ணெய் வருமானத்தின்வழி ஆண்டுக்கு ரிம 2பில்லியன் பெறும் திரெங்கானு மலேசியாவின் பணக்கார மாநிலங்களில் ஒன்று ஆனால், வறுமை விகிதம் கூடுதலாக உள்ள இடங்களில் அதுவும் ஒன்று என்றாரவர்.
“கோலா பெசுட்டில் பாஸ் வெற்றிபெற்றால் திரெங்கானுவின் மேம்பாட்டுக்காக என் முழு நேரத்தையும் ஒத்துழைப்பையும் கொடுப்பேன்”, என்றவர் உறுதி கூறினார்.