முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை

news21713d2013 மிஸ் மலேசியா உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுபெற்ற நான்கு முஸ்லிம் பெண்கள், அவர்கள் அப்போட்டியில் பங்கேற்பது “பாவமான செயல், ஹராமான செயல்” என்று முப்தி ஒருவர் குறைகூறியதை அடுத்து போட்டியினின்றும் நீக்கப்பட்டனர்.

முஸ்லிம் பெண்கள் அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு எதிராக 1996ஆம் ஆண்டு பாத்வா பிறப்பிக்கப்பட்டிருப்பதை கூட்டரசுப் பிரதேச முப்தி வான் ஜஹிடி வான் தே சுட்டிக்காட்டியதை அடுத்து  அவ்வாறு  செய்யப்பட்டதாக போட்டி ஏற்பாட்டாளர் என்னா லிம் கூறினார்.