பயனீட்டாளர் அமைப்பு: ‘சிகரட்டுக்களையும் ஹராம் என அறிவியுங்கள்

ஷிஷா-வை ஹராம் (தடை செய்யப்பட்டுள்ளது) எனப் பிரகடனம் செய்யும்  ஆணையை தேசிய இஸ்லாமிய விவகார மன்றம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து  சிகரட்டுக்களை முஸ்லிம்கள் புகைப்பதற்கும் தடை விதிக்குமாறு முஸ்லிம்  பயனீட்டாளர் சங்கம் (PPIM) அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

4,000 இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் சிகரட்டுக்கள் அபாயகரமானவை  (அதில் 40 புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை) என அந்தச் சங்கத்தின்  செயலாளர் மாஹ்மோர் ஒஸ்மான் கூறினார்.

“உண்மையில் பல நோய்களுக்கு சிகரட்டுக்கள் காரணம் என்பதை பல
பயனீட்டாளர்கள் அறிந்துள்ளனர். அதனால் விளையும் தீமைகள் தெளிவாகத்  தெரிகின்றன. ஆகவே அவை தடை செய்யப்பட வேண்டும்,” என்றார் அவர்.

சிகரட்டுக்களை ஹராம் என அறிவிக்கும் விவாதம் ஒன்றை தேசிய பாத்வா மன்றம்  1995ம் ஆண்டு நடத்தியது என்றும் ஆனால் மாநில அரசாங்கங்கள் அவ்வளவாக  ஆதரவு வழங்கவில்லை. அதனைச் சட்டமாக்கும் பொருட்டு அரசாங்கத் தகவல்  ஏட்டில் வெளியிடவும் அவை மறுத்து விட்டன என்றும் மாஹ்மோர் தெரிவித்தார்.