கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி 9 நாட்களாகி விட்டன. பிஎன் அரசாங்கப் பெரும்புள்ளிகள் அந்த இடைத் தேர்தலை ஒட்டி மொத்தம் பல மில்லியன் ரிங்கிட் பெறும் பல திட்டங்களை அறிவித்துள்ளனர்.
மொத்தம் 18,000 வாக்காளர்களை மட்டுமே கொண்ட அந்த சட்டமன்றத்
தொகுதிக்கு நேற்று வரையில் மொத்தம் 377.45 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திட்டங்களை கூட்டரசு, மாநிலத் தலைவர்கள் வெளியிட்டுள்ளதாக பாஸ் தேர்தல் இயக்குநர் டாக்டர் ஹட்டா ராம்லி தெரிவித்தார்.
முக்கிய நாளேடுகளிலும் மாற்று ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட பலவேறு அறிவிப்புக்கள் மூலம் அந்த மதிப்பீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அந்த அறிவிப்புக்களை ‘லஞ்சம்’ என வருணித்த அவர், இடைத்தேர்தல்
இல்லாவிட்டால் கோலா பெசுட் தேவைகளை பிஎன் தலைமைத்துவம் தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கும் என பாஸ் சொல்வதை அது உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.