காஜாங் சிறைச்சாலையில் உள்ள மனித உரிமைக் கட்சித் தலைவர் பி உதயகுமாருடைய மருத்துவத் தேவைகளை அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
உதயகுமார் பாதுகாப்பாக இருக்கிறார் என அவரது குடும்பத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு அதிகாரிகள் அவருக்கு முழு மருத்துவச் சிகிச்சைகளை வழங்க வேண்டும் என முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காலத்தில் அதே சிறைச்சாலையில் இருந்துள்ள லிம் சொன்னார்.
“கைதிகளை நடத்துவது சம்பந்தப்பட்ட அனைத்துலகச் சட்டங்களை பிஎன் கூட்டரசு அரசாங்கம் பின்பற்றுவதோடு மனித நேய அடிப்படைக்கு இணங்கவும் நடந்து கொள்ள வேண்டும்,” என அவர் இன்று ஒர் அறிக்கையில் சொன்னார்.
சிறையில் உள்ள உதயகுமாரின் மருத்துவத் தேவைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்று நேற்று அவரது துணைவியார் எஸ். இந்திரா தேவி, கவலை தெரிவித்தார்.
இது பேச்சி….வாழ்க உதயா..!
ஆடு நனையுதுன்னு ஓணான் அழுவுது…
வேதா என்ன செய்கிறார் ?
தம்பிக்கு கம்பி பூட்டு , அண்ணாவுக்கு வாய் பூட்டு!
காலம் பதில் சொல்லும் !!!!!! வாழ்கே உதயா,,,!!! வாழ்கே உதயா,,,,,,,,,!!!!!!!!!!!