-மலேசிய இந்து சங்கம், ஜூலை 21, 2013.
சிலாங்கூர் பத்துமலையில், 2013 ஜூலை 21ஆம் திகதியன்று நடந்தேறிய, மதமாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பரிசீலிக்கும்படி பிரதமரையும் கூட்டரசு அரசாங்கத்தையும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
1. கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 153ன் கீழ், மலாய்க்காரர்கள் மற்றும் சபா சரவாக் பூர்வீக மக்களின் சிறப்புரிமைகளை மதிக்கும் அதே வேளை, மலேசியாவில் பிற சமூகத்தவரின் சட்டப்பூர்வமான நலன்கள் குறிப்பாக அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லீம் அல்லாதவர்களின் சமயச்சுதந்திரமும் எல்லாவேளையிலும் காக்கப்பட வேண்டும் என நாம் கோருகிறோம். அதோடு “சட்டத்தின் முன் அனைவருமே சமம் என்பதுடன் அவர்களுக்கு சமமான சட்டப்பாதுகாப்பு” வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசிலமைப்பின் பிரிவு 8ன் உணர்வுக்கு இசைவாகவும் அமைய வேண்டும்.
2. 1988ல், கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு121 (துணைப்பிரிவு1) திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றங்களின் நீதிபரிபாலன அதிகாரங்கள் அகற்றப்பட்டன. நாடாளுமன்றம் மற்றும் அரசு உச்ச அதிகாரத்தின் கீழ் நீதிமன்றங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், ஷரியா நீதிமன்றங்கள் அதிகாரம் கொண்டுள்ள விவகாரங்களில் உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என்பதை குறிப்பிடும் பிரிவு 121 (துணைப்பிரிவு 1A)ம் இணைக்கப்பட்டது. 1988ல் கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 121ல் செய்யப்பட்ட இந்த திருத்தங்களுக்கு நீதிமன்றங்கள், கூட்டரசு, மாநில அரசாங்கங்கள் மற்றும் சமய அதிகாரிகள் கொடுத்துள்ள விளக்கங்களும் வியாக்கியானங்களும் முஸ்லீம் அல்லாதவர்களிடையே கடும் அதிருப்தியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. முஸ்லீம் அல்லாதவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை நியாயமாக நடந்துகொள்ளவில்லை போன்றதொரு கருத்து பெரும்பாலான முஸ்லீம் அல்லாதவர்களிடையே நிலவுகிறது.
3. சமய மாற்றம் தொடர்பான விவகாரங்களும், ஒருவர் தமது சமயம் குறித்து முடிவெடுக்கும் விவகாரங்களும் சிவில் நீதிமன்றங்களால் முடிவெடுக்கப்பட வேண்டுமேயொழிய, ஷரியா நீதிமன்றங்களால் அல்ல.
4. கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு121ல் செய்யப்பட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, சிவில் ஷரியா நீதிமன்றங்கள் முஸ்லீம் அல்லாதவர்களை அவ்வளவாக மதிப்பதில்லை. அவை வழங்கும் தீர்ப்புகள், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குடும்பங்களும் உடைந்து போயுள்ளன. இவை, நியாயமாகவும் முறையாகவும் நீதிபரிபாலிக்கப்படவில்லை என்ற தோற்றத்தைதான் ஏற்படுத்தியுள்ளன. எனவே பின்வரும் தீர்மானங்களை நாம் முன்வைக்கிறோம்.
a. கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 121ஐ மறுபரிசீலனை செய்யும்பொருட்டு, அரசியலமைப்பை திருத்த வகை செய்யும் சட்டத்தை வரைய வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு தரப்புக்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம். அதோடு,
i. 1988ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு, பிரிவு 121(1) திருத்தம் செய்யப்பட வேண்டியதுடன் நீதித்துறையின் சுதந்திரமும் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும். மேலும்,
ii. முஸ்லீம் அல்லாதவர்களின் விவகாரங்களில் ஷரியா நீதிமன்றங்கள் தலையிடாதிருப்பதை உறுதி செய்வதற்கு பிரிவு 121 (1A) ஐ அடுத்து ஒரு புதிய விதி இணைக்கப்பட வேண்டும்.
b. மேலும் முஸ்லீம் அல்லாத மக்களின் சட்டப்பூர்வ நலன்களுக்கும் அவர்களது சமயச் சுதந்திரத்துக்கும் பங்கம் விளைவிக்காவண்ணம் கூட்டரசு அரசியலமைப்புக்கும் நமது சட்டங்களுக்கும் பொருத்தமான பொருள் விளக்கம் கொடுக்கும்படியும், வழங்கப்படும் தீர்ப்புகள், முஸ்லீம் அல்லாதவர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ளும்படியும் பெரு மதிப்புக்குரிய நீதித்துறையை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
5. 18 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை, அதன் பிறப்புச் சமயத்தை தவிர வேறு எந்த மதத்துக்கும் மாற்றப்படாமல் இருக்கும்வண்ணம் கூட்டரசு சட்டங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இந்த மாநாடு கருதுகிறது. மலேசிய சமூகத்தினரிடையே நிலவும் ஓர் அபூர்வமான சூழ்நிலை காரணமாக, ஒரு குழந்தைக்கு சமய தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கும் உரிமை அதன் பெற்றோருக்கு உண்டு; ஆனால், 18 வயதை எய்தும்போதுதான் அந்த குழந்தை தனது மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொண்டுள்ளது.
6. தாய் தந்தையர் இருவர், அல்லது காப்பாளரின் ஒப்புதலின்றி 18வயதுக்குட்பட்ட குழந்தைகள் மதமாற்றம் செய்யப்படாமல் இருப்பதற்கு முஸ்லீம் அல்லாதவர்களுக்கான குடும்பச் சட்டங்களை கூட்டரசு அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும்.
7. குடும்பத்தில், ஒரு கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாறும்போது குறிப்பாக மனைவிக்குப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். அதோடு 1976 ஆண்டு (திருத்தம் செய்யப்பட்ட) திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம், 1961ஆம் ஆண்டு குழந்தைகள் காப்பாளர் சட்டம் மற்றும் முஸ்லீம் அல்லாதார் சம்பந்தப்படும் அனைத்து சட்டங்களிலும் வகை செய்யப்பட்டுள்ள உத்தரவாதங்களும் உரிமைகளும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்.
8. கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 12(2) (3) (4) முதலானவற்றையும் மாநாடு கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் 18வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கூட்டரசு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டியதுடன், பெற்றோர் இருவரின் ஒப்புதலின்றி குழந்தைகளை வேறு மதத்துக்கு, மதமாற்றம் செய்பவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறது. இந்த கோட்பாட்டை மீறுவோறுக்கு எதிராக துணை சட்டங்களையும் கூட்டரசு அரசாங்கம் வரைய வேண்டும்.
9. மேலும், இத்தகைய கோட்பாடுகளுக்கு இசைவாக மாநில அரசாங்கங்களும் தத்தம் மாநிலச் சட்டங்களை திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என நாங்கள் வேண்டுகிறோம்.
10. மலேசிய பெளத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ ஆலோசனை மன்றத்தின் மகஜரின் A மற்றும் B பகுதிகளின் உள்ளடக்கத்தையும் (பக்கம் 11-30) இத்துடன் நாம் இணைக்கிறோம். 2005ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் திகதி, இந்த மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது. அவற்றில் முன்மொழியப்பட்ட கருத்துக்களையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
11. தங்களது சமயத்தை தழுவுவோர், மற்ற சமயத்தவரையும் தங்களது மதத்துக்கு மத மாற்றம் செய்யும்படி கோரும் குறிப்பிட்ட சில சமயங்களை நாம் அங்கீகரிக்கும் அதே வேளை, தார்மீக பண்புகளுக்கேற்ப இந்த மத மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குடும்ப அமைதிக்கு ஊறு விளைவிக்காமலும் அவை இருக்க வேண்டும். மரணப்படுக்கையில் நடத்தப்படும் இறுதி நிமிட மதமாற்றம், கையூட்டு மற்றும் பிற அன்பளிப்புக்கள் மூலமான மதமாற்றம், குடும்பத்தாருக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்யப்படும் மதமாற்றம் போன்றவை, தார்மீகத்துக்கு முரணான பண்பற்ற செயல்கள் என கூறி அவற்றை இந்த மாநாடு கண்டிக்கிறது.
12. இறுதியாக தங்களது மதத்தை பரப்ப விரும்பும் பிற மதங்களைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்: தார்மீக நெறிகளுக்கு ஒப்ப உங்களது மதங்களைப் பரப்புங்கள்.
a. எமது சமய நம்பிக்கைகளுக்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.
b. ஒருவர் மரணவாசலில் இருக்கும்போது அல்லது மனோரீதியாக மிகவும்
நொந்துபோன நிலையில் (சிறைச்சாலை அல்லது மருத்துவமனையில்) இருக்குபோது மத மாற்றம் வேண்டாம்.
c. பணம் அல்லது பிற வழிகளில் அன்பளிப்பு வழங்குவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி மத மாற்றம் செய்யாதீர்கள்.
மதத்தை தேர்தெடுப்பது தனிப்பட்டவரின் விருப்பம்.அது சுயமாக தெளிவுடன் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் மதத்தை தழுவினால் சார்ந்த மதத்திற்கு மற்றும் சம்பந்த பட்ட மனிதருக்கும் பலனில்லை ஆகையால் .தாம் சார்ந்த மதத்தை தழுவ ஏற்பாடு செய்வோர் அம் மதத்திக்கு அழிவு பாதையை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை உணரவேண்டும்.
18 வயதிற்கு கீழ் உள்ள ஒருவரின் மத மாற்றம் சட்ட பூர்வமாக ஏற்ற்று கொள்ள முடியாது. அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மாற்றம் செய்யப்படவேண்டும். வெறுமனே மன்றாடி பெற வேண்டி உள்ளது. மத உரிமை பிறப்பு உரிமை. சட்டம் மதத்தை நிர்நிக்க முடியாது.
டேய் இந்து மதம் அழிகிறது என்று நிலிகன்னிர் வடிகதிங்கடா .. உண்மைலேயே மதத்த காப்பாத்துற அக்கறை இருந்தால் நீங்க கோயில்களில் மற்றும் சங்கம்த்தைவைத்து சேர்க்கும் பணத்தை எல்லாம் ஏழை மக்களின் கல்விக்கும் தேவைக்கும் உதவுங்கள் … தன்கதெரூடுரன் வெள்ளிதேர் உடபோரன் என்று கதவுடவேனாம்ட … சண்டாலர்களே மக்கள் பணத்தில் விளனடத்தி குத்தடிக்காமல் மக்களுக்கு சேவை செய்யுங்கள் … நாலு அமைசரில் ஒருத்தன் மட்டும் கொஞ்சமாவது மிளிபற்றும் இனப்பற்றும் வைத்து கொஞ்சமாவது சேவை செய்கிறான் ..மற்றமுன்று முத்தேவிகள் தமிழனுக்கு நாமம் போட்டுகொன்று இருக்கிறானுகள்
அந்த ஒரு அமைச்சர் சரவனாகவே இருக்கட்டும். சரவணின் தைரியம் மிக்க சமயப் பணியும், பொருளாதார மேம்பாட்டுக் கருத்துக்களும் எம்மை கவருகின்றன.