‘இஓ பற்றிக் கருத்துரைக்க முன்னாள் ஐஜிபி ரஹிமுக்குத் தகுதியில்லை’

igpதடுப்புச் சட்டம் தேவை என்று கூறிய முன்னாள் ஐஜிபி அப்துல் ரஹிம் நூரை டிஏபி  எம்பி  டோனி புவா சாடினார்.

மிங்குவான் மலேசியா  நேர்காணலில்  குண்டர்தனத்தை  எதிர்க்க போலீசாருக்க  அவசரகாலச் சட்டம் தேவை என்று அப்துல் ரஹிம் (இடம்)  கூறியிருப்பது போலீசார் ஆதாரங்களைச் சேகரி்ப்பதில்  அக்கறை காட்டுவதில்லை  என்பதை  ஒப்புக்கொள்வதாக அமைகிறது என்றாரவர்.

“முன்னாள் ஐஜிபி  அவ்வாறு ஒப்புக்கொண்டது போலீசின்  செயல்திறனும்  நிபுணத்துவமும் தரம்தாழ்ந்து போயிருப்பதை  உறுதிப்படுத்தும்  சான்றுரையாகும்”, என்று புவா ஓர் அறிக்கையில் கூறினார்.