கட்டாயப் பாடங்களைத் திணிப்பதின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களை சிறுபிள்ளைகளைப் போல அரசாங்கம் தொடர்ந்து நடத்த முடியாது என New Era கல்லூரியின் முன்னாள் முதல்வரான குவா கியா சூங் கூறுகிறார்.
“பொதுப் பல்கலைக்கழகங்களில் அந்தப் பாடம் பல ஆண்டுகளாகக் கட்டாயப் பாடமாக இருப்பதாகச் சொல்வது பொருத்தமானதாக தெரியவில்லை. ஏனெனில் நமது பொது பல்கலைக்கழகங்கள் படைப்பாற்றலையும் தெளிவான சிந்தனைகளையும் வளர்க்கவில்லை என்றார் அவர்.
மலேசிய ஆய்வியல், இஸ்லாமிய ஆசிய நாகரீக ஆய்வியல் போன்ற பாடங்கள் ‘விசுவாசமான’, ‘தார்மீகப் பண்புகளைக் கொண்ட’, ‘விசுவாசிகளை’ உருவாக்கும் என்ற எண்ணத்துடன் அவற்றைக் கட்டாயமாக்குவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றுக் குடங்கள் அல்ல,” என ஒர் அறிக்கையில் குவா தெரிவித்தார்.
தாம் முதல்வராக இருந்த போது கூட New Era கல்லூரியில் அந்தப் பாடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன என்றும் ஆனால் அவை திணிக்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
நமது பொதுப் பல்கலைக்கழகங்கள் படைப்பாற்றலையும் தெளிவான சிந்தனைகளையும் வளர்க்கவில்லை. இப்போது தெரியுமே நமது அறிவி ஜீவிகளைப் பற்றி!
பொதுப் பல்கலைகழகங்களில் பல்லின,பல சமத்தைச்சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்;இவர்கள் சரித்திரம் படித்தரியாதவர்களா?தீவிரவாத சிந்தனையுடைய அறிவிலிகள் இஸ்லாமிய பாடத்தை தினிக்க நினைப்பது அறிவுடைமையாகாது.