இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்காக இரண்டு வலைப்பதிவாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் ஒப்பிடுகையில் மற்ற சமயங்கள் சிறுமைப்படுத்தப்பட்ட போது அத்தகைய நடவடிக்கை ஏதுமில்லை என ஆயர் பால் தான் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய இரட்டைத் தரம், நீதிக்கு முரணானது என்பதால் தார்மீகத்துக்குப் புறம்பானது என அவர் சொன்னார்.
பெர்க்காசா தலைவர்களான இப்ராஹிம் அலி, சுல்கிப்லி நூர்டின் சம்பந்தப்பட்ட சர்ர்சைகளை ஆயர் பால் சுட்டிக் காட்டினார்.
‘அல்லாஹ்’ என்னும் சொல்லைக் கொண்ட பைபிள்களுக்கு எரியூட்டுமாறும் இப்ராஹிம் கேட்டுக் கொண்ட போதும் இந்து சமயத்தை சுல்கிப்லி இழிவுபடுத்திய போதும் அவர்கள் அந்த ஆயருடைய சீற்றத்துக்கு இலக்கானார்கள்.
“எந்த சமயம் இழிவுபடுத்தப்படக் கூடாது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளும் வேளையில் அவ்வாறு செய்கின்றவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் தான் நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் காட்ட வேண்டும்,” என்றார் அவர்.
“அல்வின் தான் விவியன் லீ (வலைப்பதிவாளர்கள்) விஷயத்தில் தண்டனை நடவடிக்கை வெகு வேகமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சுல்கிப்லி, நூர்டின் விவகாரத்தில் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என ஆயர் பால் மலேசியாகினியிடம் வருத்தத்துடன் தெரிவித்தார்.
நாட்டில் சமயப் பிரச்சனைகள் உருவாவதற்குக் காரணமானவர்களே இப்ராகிம் அலியும், சுல்கிப்லி போன்றவர்கள் தாம். மற்ற சமயங்களைப் பற்றி அவர்கள் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இஸ்லாமைப் பற்றி மற்றவர்கள் எதையும் பேசக் கூடாது என்பதே இன்று அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம். யாரைக் குறைக் கூறுவது? இஸ்லாமையா அல்லது இஸ்லாமியரையா?
யாரையும் அல்ல மகாதிமிரையும் பீ என்னையும் குறைக்கூரலாம் .