இனங்களுக்கிடையில் ஆத்திரத்தைத் தூண்டும் செயல்களைத் தடுக்க ஆலோசனை மன்றம்

news22713dஅரசாங்கம் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் ஒன்றை அமைக்கும். அம்மன்றம்  எல்லா இனங்களின் கருத்துகளையும் சேகரித்து  பல்வேறு இனங்களிடையில்  ஆத்திரத்தைத் தூண்டும்  செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்குத் திட்டமிடும்..

இது, மிதவாதத்தை ஊக்குவித்து இன இணக்கத்தை வலுப்படுத்தி அதன்வழி தேசிய ஒருமைப்பாட்டை அடையும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினார்.

டேவான் நெகாராவில்,  இன இணக்கத்தை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்தபோது  ஜோசப் குருப்  இவ்வாறு கூறினார்.

– Bernama