கோலா பெசுட் இடைத் தேர்தல் இந்த நாட்டு வரலாற்றில் புதுமையானது என்பதால் உலகம் அதனைக் கவனித்துக் கொண்டிருப்பதாக பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
அந்த இடைத் தேர்தல் முடிவுகள் திரங்கானு அரசியல் வடிவமைப்பையே மாற்றி விடும் என்றும் அவர் சொன்னார்.
ஜுன் 24 தேர்தலில் 16:16 என்ற இலக்கை பாஸ் அடைய இயலுமா என உலகம் கவனித்துக் கொண்டிருப்பதாக அன்வார் நேற்றிரவு கம்போங் தோக் சபோவில் செராமா ஒன்றில் உரையாற்றிய போது சொன்னார்.
“என்னை நம்புங்கள் நாம் வெற்றி பெற்றால் திரங்கானு அரசியல் மாற்றம் காணும். இந்த இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றதும் உலகம் நம்மைக் கவனிக்கத் தொடங்கும்,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
வெற்றி பெற வாழ்த்துகள்
தேர்தல் ஆணையத்திற்கு அம்னோவை எப்படி வெற்றி பெற வைப்பது என்பது தெரியும்! பொதுத் தேர்தலே பொடிப் பொடியாகி விட்டது, இதென்ன ஜுஜுபீ!