“தீவிரவாதிகள்” எனக் கூறிக் கொண்டதற்காக கோமாஸ் உத்துசான் மீது வழக்குப் போடும்

news22713aகோமாஸ் உறுப்பினர்கள் மூவரை ‘தீவிரவாதிகள் என முத்திரை குத்தியதற்காக’  உத்துசான் மலேசியாவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அந்த அமைப்பு  அனுப்பவிருக்கிறது என அதன் இயக்குநர் தான் ஜோ ஹான் கூறியுள்ளார்.

கோமாஸ் ஏற்பாட்டில் ‘No Fire Zone’ என்னும் திரைப்படம் ஜுலை 8ம் தேதி  திரையிடப்பட்ட போது மூன்று கோமாஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது  பற்றிய செய்தியை வெளியிட்ட போது உத்துசான் அவ்வாறு கூறிக் கொண்டது  என அவர் சொன்னார்.

“உள்துறை அமைச்சு அதிகாரிகள் இன்று அதனை எங்கள் கவனத்துக்குக் கொண்டு  வந்தனர். அந்த செய்தி நறுக்கு எங்களிடம் உள்ளது. நாங்கள் சட்ட  நடவடிக்கையைத் தொடங்குவோம். நாங்கள் நிச்சயம் அதன் மீது வழக்குப்  போடுவோம்,” என்றார் அவர்.

“தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தீவிரவாதிகளின் சந்தேகத்துக்குரிய  ஆதரவாளர்கள்” என உத்துசானின் இணையப் பதிப்பில் செய்தி  வெளியிடப்பட்டிருந்தது.

அந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதில் கோமாஸ் தொடர்பு மீது உள்துறை  அமைச்சின் திரைப்படத் தணிக்கை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இரண்டு மணி  நேரத்துக்கு மேல் விசாரித்த பின்னர் தான் மலேசியாகினியிடம் பேசினார்.

அந்தத் திரைப்படம் திரையிடப்பட்ட போது உள்துறை அமைச்சு திடீர் சோதனை  நடத்தியது. 2002ம் ஆண்டுக்கான திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் கீழ் அந்த  அமைச்சு அந்தப் படம் திரையிடப்பட்டதை விசாரிக்கிறது.