கோலா பெசுட் இடைத் தேர்தல் வாக்காளர்கள் வாக்களிக்கும் இடத்தில் மட்டுமே கைவிரல்களில் அழியா மை பூசிக்கொள்ள வேண்டும். அதற்குமுன் யாரும் அவர்களின் விரல்களில் மை தடவ முனைந்தால் அதற்கு இடமளிக்கக்கூடாது.
தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் இவ்வாறு கூறியுள்ளார். அவர், இன்று வாக்களிப்பு நாளில் செய்யத்தக்கனவற்றையும் செய்யத்தகாதனவற்றையும் விவரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இசி வைத்துள்ள அழியா மை புட்டியில்தான் வாக்காளர்கள் விரலை நனைக்க வேண்டும். வாக்காளர்களின் விரல்களை இசி அதிகாரிகள் சோதிப்பார்கள்”, என்றாரவர்.