இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசுதரப்புத் தலைமை வழக்குரைஞராக முகம்மட் ஷாபி அப்துல்லா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கும் ஆட்சேபணை “அற்பமானது”, “பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது” என முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் கூறியுள்ளார்.
ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று, ஷாபி திறமையான வழக்குரைஞர் என்பதை எண்ணி அன்வார் ஆடிப்போயிருக்கலாம். இரண்டாவதாக, அது விசாரணையைத் தாமதப்படுத்தும் உத்தியாக இருக்கலாம்.
“ஆட்சேபணையை அனுமதித்தால் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும். வழக்கு தாமதமாகும்.
“ஷாபி வழக்குரைஞர்தான் நீதிபதி அல்ல. இதை அனுமதித்தால் இதுவே கெட்ட முன்மாதிரியாக அமைந்து நீதியே நிலைகுத்தி நின்றுவிடும்”, என்றாரவர்.