அண்மைய பொதுத் தேர்தலின்போது பேச்சுரிமை, ஒன்றுகூடும் உரிமை போன்றவை எப்படி இருந்தன என்பதைக் கண்டறிய அனைத்துலக பார்வையாளர் குழு ஒன்று மலேசியா வந்துள்ளது.
மனித உரிமை மற்றும் மேம்பாடு மீதான ஆசிய அரங்கம் (போரம் ஆசியா) அமைத்துள்ள குழு ஞாயிற்றுக்கிழமை வந்தது.அது, பெர்சே, போலீஸ் உயர் அதிகாரிகள், பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் முதலானோரைச் சந்தித்து தகவல்கள் திரட்டும்.
அக்குழுவின் அறிக்கை அமைதிப்பேரணி மீதான ஐநா சிறப்பு அதிகாரி மைனா கியாயிடம் வழங்கப்படும். அவர், அதனை அக்டோபர் மாதம் கூடும் ஐநா பொதுப் பேரவையிலும் மனித உரிமை மன்றக் கூட்டத்திலும் தாக்கல் செய்வார்.