நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் கள்ளக் குடியேறிகள் மீது விரிவான நடவடிக்கை

pendatang haramநோன்புப் பெருநாளுக்குப் பின்னர் கள்ளக் குடியேறிகளைக் கண்டு பிடிப்பதற்கான  விரிவான நடவடிக்கையை போலீஸ், குடிநுழைவுத் துறை, ரேலா ஆகியவை  மேற்கொள்ளும்.

அந்தத் தகவலை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி
வெளியிட்டுள்ளார்.

குற்றச் செயல்களும் இதர சட்டவிரோத நடவடிக்கைகளும் அதிகரிப்பதற்கு கள்ளக்  குடியேறிகள் காரணமாக இருப்பதால் அரசாங்கம் அவர்கள் விஷயத்தைக்  கடுமையாக எண்ணுவதாக அவர் சொன்னார்.

“அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்வது, வேலை அனுமதி இல்லாதது,  சட்டப்பூர்வ பயணப் பத்திரங்கள் இல்லாதது ஆகியவற்றுக்காக ரமதான் மாதத்  தொடக்கத்திலிருந்து 120 கள்ளக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.”

“குடிநுழைவுத் துறை கள்ளக் குடியேறிகளை களையெடுப்பதற்கு நாடு முழுவதும்  நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,” என்றும் ஸாஹிட் புத்ரா ஜெயாவில் நேற்றிரவு  குடிநுழைவுத் துறை அதிகாரிகளுடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட  பின்னர் கூறினார்.