எம்பி: வாக்காளர் பட்டியலில் ‘பிரச்னைக்குரிய’ அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும் 49,159 பேர்

news23713b13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் 49,159  பேருடைய அடையாளக் கார்டுகள் ‘பிரச்னைக்குரியவை’ என  வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்திடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16ம் தேதி கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில்  சாட்சியமளித்த தேசியப் பதிவுத் துறை அதிகாரி ஆதாரமாக வழங்கிய  பிரச்னைக்குரிய அடையாளக் கார்டுகள் பட்டியலுடன் வாக்காளர் பட்டியலையும்  சோதனை செய்த போது தாம் அந்த 49,159 வாக்காளர்களைக் கண்டு பிடித்ததாக  செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறினார்.

அந்த எண்ணிக்கை மொத்த சபா வாக்காளர் எண்ணிக்கையில் 4.9 விழுக்காடு என  ஒங் குறிப்பிட்டார். “தேர்தல்களில் மாற்றம்” ஏற்படுவதற்கு அந்த எண்ணிக்கை  போதுமானது என்றும் அவர் சொன்னார்.

எடுத்துக்காட்டுக்கு தாவாவ், பியூபோர்ட் ஆகியவற்றில் வெற்றி பெற்றவருடைய  பெரும்பான்மை அந்தத் தொகுதிகளில் பிரச்னைக்குரிய அடையாளக் கார்டுகளை  வைத்துள்ள வாக்காளர் எண்ணிக்கையை விட சிறியதாகும் என்றார் அவர்.

“முக்கியமான தொகுதிகளில் பிரச்னைக்குரிய அடையாளக் கார்டுகளை வைத்துள்ள  வாக்காளர்கள் வைக்கப்பட்டால் தேர்தல் முடிவுகளையே அது பாதித்து விடும்.”

TAGS: