Project IC என அழைக்கப்படும் அடையாளக் கார்டு திட்டத்தில் தாம் சம்பந்தப்படவில்லை என சபா மாநில முதலமைச்சர் மூசா அமான் கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் (ஆர்சிஐ) கூறியுள்ளார்.
அந்தத் திட்டத்தில் மூசா அமானுக்கும் தொடர்பு இருந்ததாக கடந்த வாரம் ஆர்சிஐ-யிடம் ஒரு சாட்சி கூறியதை அவர் மறுத்தார்.
“அடையாளக் கார்டு திட்டத்துடன் என் கட்சிக்காரரை இணைக்கும் கடுமையான குற்றச்சாட்டை கடந்த வியாழக் கிழமை டாக்டர் சொங் எங் லியோங் சுமத்தியிருந்தார்,” என மூசா-வின் வழக்குரைஞர் ரோடரிக் பெர்ணான்டஸ் கோத்தா கினாபாலுவில் இன்று ஆர்சிஐ-யிடம் கூறினார்.
அந்த விசாரணையைக் கவனிக்குமாறு சொங் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கை குறிப்புக்களை கோருமாறும் மூசா தமக்கு ஆணையிட்டுள்ளதாக முன்னாள் சபா சட்டத் துறைத் தலைவருமான பெர்ணான்டஸ் சொன்னார்.
விசாரணை என்ற பெயரில் நேரத்தை வீணாக்காமல்…. மகாதிரை இரண்டு தட்டு தட்டி கேட்டால் உண்மை வெளிவரும்…