ராபிஸி: இசி-யின் தொப்பிக் குத்தகைகள் கொள்முதல் விதிமுறைகளை மீறியுள்ளன

rafizi01இசி என்ற தேர்தல் ஆணையம் தொப்பிகளை விநியோகம் செய்வதற்கான  குத்தகைகளை வழங்குவதற்கு நேரடிப் பேச்சுக்களில் ஈடுபட்ட போது கொள்முதல்  விதிமுறைகளை மீறியுள்ளதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில்  கூறியுள்ளார்.

எல்லா மூன்று தொப்பிக் குத்தகைகளும் ஒரே நபர் சம்பந்தப்பட்ட மூன்று  நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது மிகவும் கடுமையான விஷயம் என்றும்  அவர் சொன்னார்.

‘திறந்த டெண்டர் முறையிலிருந்து விலக்கு பெறுவதற்கான கொள்முதல்  வழிமுறைகளில் எதனையும் அந்தக் குத்தகைகள் பூர்த்தி செய்யவில்லை,” என்றும்  அவர் ராபிஸி தெரிவித்தார்.

அவசரத் தேவை, சீரான தேவை, ஒரே ஒரு விநியோக ஆதாரம், பாதுகாப்பு  ஆகிய விஷயங்களில் நேரடிப் பேச்சுகளை கருவூல சுற்றறிக்கை அனுமதிக்கின்றது.

பூமிபுத்ரா நிறுவனங்கள் என்ற ஐந்தாவது வழிமுறையில் சிறப்பு டெண்டர்கள்  கோரப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

TAGS: