குளியலறையில் சாப்பிடுமாறு மாணவர்களை பள்ளிக்கூடம் ‘கட்டாயப்படுத்தியது’

news23713cதொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றின் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் நோன்பு  மாதத்தின் போது குளியலறையில் சாப்பிடுமாறு செய்யப்பட்டதைக் காட்டுவதாக  கூறப்படும் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தப் படங்கள் இணையப் பயனாளிகளிடையே ஆத்திரத்தை மூட்டி விட்டுள்ளது.

முகநூலில் பெற்றோர் ஒருவர் சேர்த்துள்ளதாக கருதப்படும் அந்தப் படங்கள்-  சுங்கை பூலோவுக்கு அருகில் உள்ளது எனக் கூறப்பட்ட அந்தப் பள்ளிக்கூடத்தின்  குளியலறையில் அல்லது உடை மாற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள  மேசைகளைச் சுற்றிலும் மாணவர்கள் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.

பள்ளிக்கூட அதிகாரிகள் கழிப்பறைகளுக்கு அடுத்து உள்ள அந்த சாப்பாட்டு அறையில் மாணவர்களை  சாப்பிடுமாறு செய்ததாகச் சொல்லப்படுகின்றது.

சிற்றுண்டிச் சாலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படவில்லை என்றும் ரமதான்  மாதம் முழுவதும் அது மூடப்பட்டிருக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

பள்ளிக்கூட அதிகாரிகளுடைய பதிலுக்காக காத்திருப்பதால் மலேசியாகினி அந்தப்  பள்ளிக்கூடத்தின் அடையாளத்தை வெளியிடவில்லை.

அந்த விஷயத்தை அறிந்துள்ளதாகக் கூறப்படும் கல்வி அமைச்சுடனும் மாநிலக்  கல்வித் துறையுடனும் மலேசியாகினி தொடர்பு கொண்டு வருகின்றது.