“மாணவர்களிடைய நாட்டுப்பற்று, நல்லிணக்கம், தேசியவாதம் ஆகிய உணர்வுகளை வளர்ப்பதே இஸ்லாமிய ஆசிய நாகரீக ஆய்வியலைத் தனியார் உயர் கல்விக் கூடங்களில் கட்டாயப் பாடமாக்குவதின் நோக்கமாகும்.”
அது நாட்டு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என கல்வி அமைச்சு ஒர் அறிக்கையில் கூறியுள்ளது.
“நமது அடையாளங்களுக்கும் பண்புகளுக்கும் பங்காற்றியுள்ள பல்வேறு
நாகரீகங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டு 2006ம் ஆண்டு பொதுப் பல்கலைக்கழகங்களில் Titas தொடங்கப்பட்டது.”
“அந்தப் பாடத்தை எடுப்பதில் பொதுப் பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பிரச்னையையும் எதிர்நோக்கவில்லை. சிலர் அந்தப் பாடங்களில் மிகச் சிறந்த தேர்ச்சிகளைப் பெற்றுள்ளனர்,” என உயர் கல்வித் துறை தலைமை இயக்குநர் மோர்ஷிடி சிராட் கூறினார்.
“ஆகவே முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு Titas பாடத்தைக்
கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை.”
“அத்துடன் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு அது கட்டாயப் பாடமாகும். அவர்கள் சீன, இந்திய நாகரீகங்களையும் எதிர்கால நாகரீகங்களைக் கற்பர்,” என்றும் மோர்ஷிடி சொன்னார்.