குளியலறை மார்ச் தொடக்கம் ‘சிற்றுண்டிச் சாலையாக’ பயன்படுத்தப்படுகின்றது.

news23713eசுங்கை பூலோவில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் குளியலறை, முறையான  சிற்றுண்டிச் சாலையில் நிலவும் ‘இடத்தட்டுப்பாடு’ காரணமாக இவ்வாண்டு மார்ச்  மாதம் தொடக்கம் ‘சிற்றுண்டிச் சாலையாக’ பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மாணவர்கள் அனைவரையும் தாங்கும் அளவுக்கு அந்த சிற்றுண்டிச்சாலை  போதுமானதாக இல்லை என ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை  ஆசிரியர் தமக்குத் தெரிவித்துள்ளதாக இரண்டாவது கல்வித் துணை அமைச்சர் பி  கமலநாதனுடைய சிறப்பு அதிகாரி எஸ் யோகேந்திரன் தெரிவித்தார்.

என்றாலும் இடம் இருந்த போதிலும் ரமதான் மாதத்தில் அந்த சிற்றுண்டிச் சாலை  ஏன் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு அவர் விளக்கம் தரவில்லை. அந்த  விஷயத்தை கமலநாதனிடம் கொண்டு செல்வதாக மட்டும் அவர் சொன்னார்.

“ஆனால் அந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டது. மாணவர்களுக்கு சிற்றுண்டிச்  சாலையில் இடம் ஒதுக்கப்படும்,” என அவர் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகம்,  கல்வி அமைச்சு அதிகாரிகள் ஆகியோரை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட  வளாகத்தில் இன்று சந்தித்த பின்னர் தெரிவித்தார்.