திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட், வேண்டப்பட்டவர்களுக்குக் குத்தகைகள் வழங்கும் பழக்கத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார். அரசியலில் நிலைத்திருக்க அவ்வாறு செய்வது அவசியம் என்றாரவர்.
“ஒரு வேலை இருக்கிறது. அதை பாஸ் குத்தகையாளருக்குக் கொடுத்தேன் என்றால் நான் முட்டாள்.அதிகாரத்தைப் பெறுவது, அதில் நிலைத்திருப்பது…. இதுதான் அரசியல்”, என்றார்.
கோலா பெசுட் அனைத்துலக சுற்றுலா நுழைவாயில் திட்டத்தால் அம்னோவுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே பயனடைவர் என்று பாக்க சட்டமன்ற உறுப்பினர் சைபுல் பஹ்ரி மாமாட் நேற்று கூறியதற்கு மந்திரி புசார் இவ்வாறு பதிலளித்தார்.
வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் சலுகை கிடைக்கும் மற்றவர்கள் எல்லாம் …. கொண்டு இருக்கனும். இதுதானே அம்னோவின் தாரக மந்திரம்..
அயோக்கியத்தனமான அம்னோவின் அரசியலுக்கு இதைவிட ஒரு வாக்குமூலம் இருக்கமுடியுமா? வேறு எந்த ஜனநாயக நாட்டிலாவது இப்படிப் பேசிவிட்டு பதவியில் இருக்கமுடியுமா? “மலேசியா போலே” என்பதின் முழு உண்மைப் பொருள் இதுதான்போல் இருக்கிறது..! இது எப்படியிருக்கு என்றால்… “நாங்க இப்படித்தான் இருப்போம் , நீங்க என்ன செய்விங்க? உங்களால் எங்களை என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்பதைப்போல் உள்ளது. எனக்கு இன்னும் இறைநம்பிக்கை குறையாமல் உள்ளது. இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்தேதீரும். வாழ்க மலேசியா!
உனக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? மக்களுடைய வரிப்பணம் என்பது உன் மூலைக்கு எட்டவில்லையா, உன்னுடைய சம்பலமும்கூட மக்களின் வரிப்பணமே, இதுகூட தெரியாத நீர் மந்திரி பெசார் பதவிக்கு தகுதியில்லாதவர்.