முஸ்லிம் அல்லாத மாணவர்களைப் பள்ளிக்கூட குளியலறையில் தங்கள் உணவை சாப்பிடுமாறு செய்த ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என மஇகா தலைமைப் பொருளாளர் ஜாஸ்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த விவகாரம் மீது கல்வி அமைச்சின் விசாரணை முடிவுகளுக்கு காத்திருப்பதாக ஒர் அறிக்கையில் செனட்டருமான அவர் கூறினார்.
“அந்தப் பிரச்னை ஏதுமறியாத பிள்ளைகளுடைய படங்களுக்கு அப்பாலும் செல்கின்றது. அந்தப் பிள்ளைகள் உண்மையில் துன்புறுத்தப்பட்டுள்ளனர்,” என அவர் சொன்னார்.
தமக்கு வேறுபாடான நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை வேண்டுமென்றே அலட்சியம் செய்வது, மதிக்காதது ஆகியவையே பிரச்னையின் முக்கிய அம்சமாகும் என ஜாஸ்பால் சொன்னார். சுருக்கமாகச் சொன்னால் அது வெறித்தனம் என்றார் அவர்.
இப்படிப்பட்ட தகுதியில்லாத, மற்றவர்களை மதிக்கதெரியாத தலைமையாசிரியர்களை உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும், கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்குமா?
நன்றி ஜஸ்பால்! இப்படி சிங்குகளைக் கொண்டு வந்து தான் ம.இ.கா.வைக் காப்பாற்ற வேண்டும் போலிருக்கிறது! தமிழன் இப்படியெல்லாம் வாய்த் திறக்க மாட்டான்! வரும்போதே தமிழன் வாயில் கொலுக்கட்டையோடு தான் வருவான்! போகும் போது மரக்கட்டையோடு தான் போவான்!
நன்றி ஜஸ்பால் சிங், இந்தியர்களின் மீது உனக்கு இருக்கும் அக்கறையை பாராட்டுகிறேன் , இந்த அக்கறை ஒரு காலம் வரை இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது, ஏன் என்றால் நீ ம.இ.கா காரர் ஆயிற்றே….
ஐயா இடைநீக்கம் தான் முடிவு என்றால். என்னைக் கேட்டால் தேவை இல்லை. ஒரு கல்வி மானே இந்த மாதிரியான மூளையைக் கொண்டவனாக இருந்தால் இவனிடம் எப்படி ஐயா உயர்ந்த குணம் படைத்த கல்விமானை பார்க்க முடியும் இவனுக்கு அரசாங்கம் வழங்கும் தண்டனை என்னவாக இருக்க வேண்டும் தெரியுமா? இவனுக்கு உடனே மனோத்தத்துவச் சிகிச்சை அளிப்பதுதான்!