குளியலறை விவகாரத்தில் தலைமை ஆசிரியரை வலைப்பதிவாளர் பாதுகாக்கிறார்

schoolகுளியலறையில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் உணவு உட்கொள்ளும் படங்கள்  வெளியானதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து வலைப்பதிவாளர்  ஒருவர் சுங்கை பூலோவில் உள்ள ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கு  வலைப்பதிவாளர் ஒருவர் சென்றார்.

செய்திகளில் கூறப்பட்டுள்ளது போன்ற நிலைமை அங்கு காணப்படவில்லை என  அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பள்ளிக்கூடத்தின் முஸ்லிம் ஆசிரியர்கள் அதே அறையில் நோன்பு  துறக்கும் படம் ஒன்றையும் அவர் தமது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார்.school1

அந்தப் பள்ளிக்கூட கேண்டீனில் இடைவேளையின் போது ஒரே நேரத்தில் 350  மாணவர்கள் அமர முடியாது என Y1M Checkmate அந்த வலைப்பதிவில்  கூறப்பட்டுள்ளது.

அதன் விளைவாக மாணவர்கள் கேண்டீனுக்கு வெளியில் அமர்ந்து உணவை  உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

“அதனைக் கண்ட தலைமை ஆசிரியர் கேண்டீனுக்குச் சில மீட்டர் தொலைவில்  இருக்கும் உடைமாற்றும் அறைகளில் ஒன்றை பயன்படுத்த முடிவு செய்தார்.”

“அந்த உடைமாற்று அறையில் மேசைகளும் நாற்காலிகளும் உள்ளன. 2013 மார்ச்  தொடக்கம் அது பயன்படுத்தப்பட்டு வருகின்றது, சில வலைப்பதிவுகள் சொல்வது  போல அண்மைய காலத்திலிருந்து அல்ல,” என அவர் எழுதியுள்ளார்.

school2“ரமதான் தொடக்கம் வரையில் மலாய்க்காரர்கள் உட்பட எல்லா மாணவர்களும்  அந்த அறையை கேண்டீனாக பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த உடைமாற்று  அறைக்கு அருகில் கழிப்பறைகள் ஏதுமில்லை என நான் மீண்டும் சொல்கிறேன்.”

அந்த வலைப்பதிவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையானவையா என்பதை  மலேசியாகினி உறுதி செய்ய முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,  தரப்புக்கள் ஆகியோரிடமிருந்து மேலும் தகவல்களைப் பெறுவதற்கு அது முயன்று
வருகின்றது.school3

உடைமாற்றும் அறை/குளியலறையில் பிள்ளைகள் சாப்பிடும் படங்கள்  வெளியானதும் இணையப் பயனாளிகள் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தனர்.  பள்ளிக்கூட அதிகாரிகள் இனவாத உணர்வுடன் நடந்து கொள்வதாக அவர்கள்  குற்றம் சாட்டினர்.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா-வும் அரசு சாரா
அமைப்புக்களின் தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். விசாரணை
நடத்துவதாக கல்வி அமைச்சு வாக்குறுதி அளித்துள்ளது.