கலகத் தடுப்புப் போலீசாருக்கு பொய் கோரிக்கைகளை கொடுத்ததற்காக உணவு விநியோகிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

பினாங்கு கலகத் தடுப்புப் போலீசாருக்கு மொத்தம் 115,204.00 ரிங்கிட் மதிப்புள்ள  பொய் கோரிக்கைகளை வழங்கியதாக கூறப்படும் உணவு விநியோகிப்பாளர்  ஒருவரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

59 வயதான அந்த ஆடவர் இன்று காலை மணி 10.30 வாக்கில் கைது
செய்யப்பட்டார். அவர் மீது அடுத்த வாரம் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

samarajooகடந்த ஆண்டு பினாங்கு கலகத் தடுப்புப் போலீசாருக்கு அவர்களுக்கு  பயிற்சியின் போது உணவுப் பொருளை வழங்கியதற்காக சந்தேகத்துக்குரிய அந்த  நபர் பொய் கோரிக்கைகளை சமர்பித்ததாகச் சொல்லப்படுகின்றது.

ஆனால் அந்த உணவுப் பொருள் போலீஸ்காரர்களுக்கு கொடுக்கப்படவே இல்லை  என்றும் தெரியவந்துள்ளது.

அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதை பினாங்கு எம்ஏசிசி இயக்குநர் சமராஜு  மாணிக்கம் உறுதிப்படுத்தினார்.