மைக்கா விவகாரம் மேலவையில் எழுப்பப்பட்டது

senateமைக்கா ஹோல்டிங்ஸ் சர்ச்சை குறித்து செனட்டர் ஜாஸ்பால் சிங் நேற்று  மேலவையில் பேசியுள்ளார்.

பேராசைக்கும் முறைகேடான நிர்வாகத்துக்கும் அது நல்ல எடுத்துக்காட்டு என  அவர் வருணித்தார்.

கடனில் மூழ்கியிருந்த மஇகா-வின் முதலீட்டுக் கரமான மைக்கா ஹோல்டிங்ஸுக்கு   கடைசியாக முன்னள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலுவின் புதல்வர் வேள்பாரி  தலைமை தாங்கினார்.

“பேச்சுத் திறமையுள்ள மைக்கா மேம்பாட்டாளர்கள் மீது மிக எளிதாக நம்பிக்கை  வைத்து தங்கள் சேமிப்புக்களை கொடுத்தவர்கள் 25 ஆண்டுகளுக்கு மேல்  கசப்பான அனுபவத்தைப் பெற்றுள்ளனர்,” என ஜாஸ்பால் சொன்னார்.

சாமிவேலுவை அடுத்து கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜி
பழனிவேலுக்கு மிக அணுக்கமானவர் எனக் கருதப்படும் ஜாஸ்பால் மஇகா  பொருளாளரும் ஆவார்.senate1

அவர் மேலவையில் யாங் டி பெர்துவான் அகோங் ஆற்றிய உரைக்கு நன்றி  தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசினார்.

இந்திய சமூகத்தின் செல்வத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் 1980ம் ஆண்டுகளின்  தொடக்கத்தில் மைக்கா தோற்றுவிக்கப்பட்டதாக ஜாஸ்பால் சொன்னார்.

“பெரும்பாலும் ஏழைகளான இந்தியர்கள் அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாகினர்.  சில ஆண்டுகளில் ஒராயிரம் முதல் ஈராயிரம் விழுக்காடு வரையில் கிடைக்கும்  என அவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர்.”

“சிலர் தங்கள் சேமிப்புக்களை அனைத்தையும் கொடுத்தனர். சிலர் கடன் வாங்கி  முதலீடு செய்தனர். சிலர் மைக்காவில் முதலீடு செய்ய நகைகளைக் கூட அடகு  வைத்தனர்,” என்றார் அவர்.

“தொடக்கத்திலிருந்து வர்த்தக ஆற்றலைக் காட்டிலும் அரசியல் ஆதரவாளர்கள்  என்பதற்காக நியமிக்கப்பட்ட மோசமான நிர்வாகிகள் மைக்காவுக்கு தலைமை  தாங்கினர்.”

“அரசாங்கம் மைக்காவுக்கு பங்குகளையும் பல சகாயங்களையும் வழங்கிய  போதிலும் அந்த நிறுவனம் மோசமாக தோல்வி கண்டது,” என ஜாஸ்பால் மேலும்  சொன்னார்.