குளியலறை தற்காலிக சிற்றுண்டி நிலையமாக பயன்படுத்தப்படுவது இன, சமய சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்று கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறுகிறார்.
மார்ச் மாதத்திலிருந்தே அந்த இடம் ஒரு தற்காலிக சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். கமலநாதன் எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானாவில் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிற்றுண்டி நிலையத்தைப் புதுப்பிக்கும் வேலை இரண்டு வாரங்களுக்குமுன் தொடங்கியதாக அவர் சொன்னார்.
அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கும் அது பற்றித் தெரியம்.
இதை விளக்கத்தான் நீங்கள் அங்கு சென்றீர்களா? துணை அமைச்சர் அவர்களே இந்த நாட்டில் இந்தியர்களுக்கு எவ்வளவு கொடுமை நிகழ்ந்தாலும் உங்களுக்கு என்ன உங்கள் பதவிக்கு மட்டும் பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த நாட்டில் இந்தியர்களை எவ்வளவு ஏலனம் பண்ண வேண்டுமோ அவ்வளவும் பண்ணி விட்டார்கள் இனி ஒரு வாரத்துக்கு அறிக்கை மன்னர்களின் அறிக்கைக்கு வேலை வந்து விட்டது. அறிக்கை மூலம் இந்த நாட்டில் நான் இன்னும் இருக்கிறேன் என்று நிரூபிக்க நல்ல நேரம் அறிக்கை மன்னர்களுக்கு! பரிதாபம் இந்நாட்டு இந்தியர்கள். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் தமிழனையும் தமிழையும் அளிப்பது வேறு எவரும் அல்ல தமிழனே!
தோடா! வந்துட்டாரு புது கூஜா தூக்கி..!
கமலநாதா.. பேசுறத பாத்து பேசு… அப்புறம் வேல போயிற-கிற போகுது…!
உங்கள் பார்வைக்கு அது அப்படி தெரிந்தாலும் எங்கள் பார்வைக்கு அது இனம், சமயம் சம்பந்தப் பட்ட விவகாரமாகவே தோன்றுகிறது. இதெல்லாம் அறிவுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் மாறுபடுவது இயற்கையே!
கமலநாதனின் அரசியல் 10 வருஷமா இதே தோரணைதான் சமுதாயத்தை அம்னோவுக்கு அடகு வைத்து சமரசம் பேசும் பயங்கர பொது உறவு உறவியல், உளவியல் அதிகாரி. இன்று எழுதி வைப்போம் தமிழ் கல்வித் துறைக்கு இவரால் ஒரு பயனற்ற நிலைதான். மெட்ரிகுலேசன் எல்லாம் மலாய் மாணவர்களுக்குத்தான்! தமிழ் பள்ளிகளில் அறிக்கையைக் கூட தமிழில் எழுத முடியாத கட்டுப்பாடு நமக்கு!
நீங்கள் கூறும் விளக்கத்தை ஒரு தமிழனாக ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களை போன்ற தலைவர் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான். தெரிந்தது ஒரு பள்ளி இன்னும் தெரியாதது எத்தனையோ…..?
உங்கள் சமாதானம், விளக்கம் எங்களுக்கு தேவை இல்லை ! நபிகள் நாயகம் கூறியதாக ஒரு செய்தி “எக்காரணத்திற்கும் சரி, எந்தச் சூழ்நிலையிலும் சரி கழிவறையிலோ அல்லது குளியல் அறையிலோ உணவு உண்பது தவறு, அது முறையல்ல” என்று கூறியுள்ளார். பிறகு ஏன் முரணான போக்கு? சீர்படுத்தி முடிந்த சிற்றுண்டி நிலையத்தை ஏன் பயன்படுத்துவதற்கு இடம் கொடுக்க வில்லை? இதுதான் எங்கள் கேள்வி! காதுக்கு பூ சுத்தாதே! நோன்பு நாட்களில் கூடவா இப்படிப்பட்ட அராஜகம்!
அப்படிங்கலாண்ணா? இப்போ நம்ம பிள்ளைகள் குளியலறையில் சாப்பிடுவது படத்துடன் ஆதாரமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. எங்கே…மற்ற இன மாணவர்கள் மார்ச் மாதம் முதலே அங்கே சாப்பிட்டார்கள் என்றால் அதற்கான ஆதாரம்(படம்) எங்கே?
Kamalanatha jangan gadai maruah bangsa u sendiri kerana u nak hidup senang. Cuba fikir mesti ada bayak tempat disekolah itu! kalau kosongkan satu bilik pun boleh buat satu kantin sementara. Fikirlah dengan waras Kamalanathan!
கமலநாதன் அவர்களே, பள்ளியின் கழிவறையில் சாப்பிட வைத்தது சரியா தவறா?. தவறு என்றால் ஏன் தலைமை ஆசிரியர் மேல் தண்டிக்கவில்லை, இதுதான் மக்கள் எதிர்பார்கிறார்கள். தயவு செய்து BN ஆதரவா பேசுவதை நிறுத்தி விட்டு, தமிழ் இனத்திற்காக பாடு பட வேண்டும்.
நமது ம. இ .கா. தலைவர்கள் நாடாளுமன்றத்தில் எதையும் எழுந்து நின்று வாய் திறந்து கேட்கமாட்டார்கள், காரணம் எழுந்து நின்று கேள்வி கேட்டால் அவர்களுடைய நாற்காலி இனி ஒருவன் பறித்து விடுவான் என்ற பயம். நாளிதழ்களில் வெறும் வெற்று அறிக்கை மட்டும் விடுவார்கள். இவன் சும்மா நாடகம் ஆடுவான். நாளை இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் எந்த அறிக்கையும் விட மாட்டான். காரணம் நாம் மறந்து விடுவோம் என்ற எண்ணம். இவன் நமது இனத்திற்கு பேசமாட்டான்.
அமைச்சனே உன்னைக் கண்டாலே கோபம் வருது…..!
நீ வேணும்னா உன் பதவிக்காக அங்கே சாப்பிடு! எங்க பிள்ளைகளுக்கு
குறைந்தது ஒரு வகுப்பு கூடவா இல்லை???
தவறு நம் இனத்தவன் மேல் உள்ளது. பிள்ளையை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பாமல் அடுத்தவனை நம்பி அவன் பள்ளிக்கு அனுப்புனது சொந்தத் தாய் இருக்க அடுத்தவன் தாயிடம் பால் குடிக்க அனுபுவதற்கு சமானம். தமிழனுக்கு சுட்டு போட்டலம் தமிழ் உணர்வு வராது. தமிழனுக்கு இதுவும் வேணும் இன்னவும் வேணும் இதற்கு மேலயும் வேணும். மானம் உள்ள தமிழன் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ் இனம் வாழ்க!
மாணவர்கள் அவ்விடத்தில் உணவருந்த அனுமதித்தது சரியா. அதற்கு பதில் கூறும் துணை அமைச்சரே. இட போதா குறை என்ற நையாண்டி சாக்கு சொல்ல வேண்டாம். பதவிக்கு ஜால்ரா போட வேண்டாம். இவ் விசயத்தில் நீங்கள் கூறும் வார்த்தை விபரீதத்தை உங்களுக்கு கொண்டு வர நிறைய வாய்ப்புண்டு
பதவிக்காக நம் அமைச்சர் வேணும்னா அந்த இடத்தில் சாப்பிடுவார். அனால் நமக்கு கொஞ்சம் ரோஷம் இருக்குதப்பா! அறிவு வடியும் ஜென்மங்களே வருங்காலத்தில் நம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் இந்த மாதிரி கேவலமெல்லாம் நமக்கு வராது . எவனும் நமக்காக பேசவும் தேவை இல்லை …..
அதிமேதாவித் தலைவர்களே மக்களே, இப்ப லபோ லபோன்னு கத்துரீங்க. தேசிய பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புனா பெருமை, நல்லா படிக்கும் இன்னும் பல காரணம் சொல்லுது தமிழ் மரமண்டைகள். இவனுங்க நம்ம பிள்ளைகள அங்கு நடத்திய விதத்த பார்த்தும் திருந்தாதிங்க! இன்னும் என்ன வேண்டுமாம் இந்த மரமண்டைகளுக்கு. தமிழ் பள்ளியை நம்ப முடியலை, தமிழ் ஆசிரியர்களை நம்ப முடியல. இப்ப உங்களுக்கு குத்துதா குடையுதா? சபா மாணவி ஒருவர் அந்தப் பள்ளியில் இருந்தாராம். அந்த மாணவியோட அம்மா உடனே வேற பள்ளிக்கு மாத்திட்டாங்களாம். ஆன தமிழ் மக்கள் இன்னும் சொரனை கெட்டு கூப்பாடு போடுது!
அமைச்சர் சொல்கிறார்… சிற்றுண்டி நிலையம் இரண்டுவார காலமாகத்தான் புதுப்பிக்கப்படுகிறதாம். ஆனால் மற்ற இனப்பிள்ளைகள் மார்ச் மாதத்திலிருந்தே அந்த குளியலறையை சிற்றுண்டி நிலையமாக உபயோகப் படுத்துகிறார்களாம். அப்போ நான்கு மாதங்களாக பிள்ளைகள் அதைச் சிற்றுண்டி நிலையமாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பது உண்மை என்றால், நான்கு மாதகாலமாக மூடவேண்டிய அவசியமென்ன? அமைச்சர் மிகவும் புத்திசாலித்தனமாக பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் , மார்ச் மாதம் என்று சொல்லிவிட்டால் எல்லோரும்தான் …அதாவது மலாய் மாணவர்களும்தான் அங்கு உணவருந்தினர் என்று சமத்துவத்தை நிலை நாட்டுகிறார். ஐயா அமைச்சரே… நம் பிள்ளைகளாக இருந்தாலும் , மலாய் மாணவர்களாக இருந்தாலும், யாராக இருந்தாலும் குளியலறையில் குடிக்கவும் உண்ணவும் செய்தது படித்த ஆசிரியர்கள் செய்யக்கூடிய செயலா? என்று கேட்கிறேன்? இப்படியெல்லாம் பிள்ளைகளை நடத்தினால் எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களையும் அப்படித்தானே நடத்துவார்கள்!
பொய் சொல்லாதே……!
இது இனம், சமயம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல? அட பயல்களா எவன்டா இனத்தை பற்றி பேசுறது? இது முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பிரச்சனை. தமிழ் மாணவர்களை மலாய் பள்ளிக்கு அனுப்பினால் இதுதாண்டா கதி. நாளைக்கு இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? பிள்ளைகளை தமிழ் பள்ளிக் கூடத்தில் போட்டால் கசக்குதா?
கல்வி மட்டும் தான் இந்த சமூகத்தின் கண். அதையும் பரிக்கப் பார்கின்றவர்களைத் தடுக்க தெரியாத அமைச்சரே,இதை எப்படி தீர்ப்பீர்கள்..?அமைச்சரே,இது உங்கள் பிள்ளைக்கு நடந்திருந்தால்,உங்கள் மணநிலை எப்படி இருக்கும்..?இதே ஒரு தமிழ் பெரியாசிரியர் செய்திருந்தால்,அவருக்கு இப்பொழுது பணி நீக்கம் தாண்.அல்லது இது இஸ்லாம் மாணவர்களுக்கோ நடந்திருந்தால்,இப்பொழுது இது தேசிய மற்றும் இனவாதம் செய்திதான்.நம் இண மாணவர்களும் மனிதர்கள் தான்.தயவு செய்து அவர்களையும் மனிதர்களாக மதியுங்கள்.இது நமக்கு நடந்ததால்,இது வெறும் தமிழர் செய்திதான்.வாழ்க நீதி மலேசியாவில்..!!
நம் இண மாணவர்களும் மனிதர்கள் தான்.தயவு செய்து அவர்களையும் மனிதர்களாக மதியுங்கள்.
“நாடகமே இந்த உலகம்…… லாலாள்ளலலல்ல்லல …… “ஆடுவதோ பொம்மலாட்டம் ……….. லாலாள்ளலலள்ளலலல்லல
….தக்க தைய தையா….. தக்க தைய தைய தையா….. ஜிஞ்சக்க்க்க்க்க் …ஜிஞ்சக்க்க்க்க்க்க்க்க்க்க்……. ஜிஞ்சக்…ஜின்சாக் …( வடிவேல் இஸ்டைல ) ஐயோ…. ஐயோ ….. 🙂 🙂 🙂
சி.ரகுவின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பிருந்தால் இம்மாதிரி எல்லாம் நடந்திருக்குமா?முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். பிள்ளைகளை மலாய்ப்பள்ளிக்கு அனுப்பிவிட்டு பின் குத்துதே குடையுதே என்றால் என்ன செய்வது. சூடு சுரணையுள்ள எந்த தமிழனும் இனி அந்த பள்ளிக்குத் தன் பிள்ளைகளை அனுப்பக்கூடாது.என் பிள்ளை மலக்கூடத்தின் பக்கத்தில் சாப்பிட்டாலும் பரவாயில்லை;நான் மலாய்ப்பள்ளிக்குதான் அனுப்புவேன் என்றால் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.
விளங்காதவன் எல்லாம் விளக்கம் சொன்னா வெளக்கெண்ணை மாதிரி தான் இருக்கும். தலைமை ஆசிரியர் விளக்கம் சொல்லி மன்னிப்புக் கேட்டாராம் இவரு பெரிய மஹான் மாதிரி மன்னிச்சிபுட்டாராம். யாரு காதுல பூவை சுத்துறே மவனே. அவனுங்களுக்கு வக்காலத்து வாங்குற உமது விளக்கம் தேவை இல்லை. அந்த தலைமை ஆசிரியர் எல்லா தமிழ் மாணவர்கலிடத்திலும் அவர்களின் பெற்றோர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும். இதை உம்மால் செய்ய முடியுமா?
அவதார் சொல்லுவது தான் சரி, பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் செய்த தவறு.. தமிழ்ப்பள்ளிகள் இருக்க ஏன் மாற்றான் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.. அடிப்படையில் கமலநாதன் ஒரு கல்வி இலாகா அதிகாரி.. அவர் அப்படித்தான் பேசுவார்.. குதிரை குச்சிமிட்டாய் சாப்பிட்டது என்பார்.. நாமும் அவரோடு சேர்ந்து “அமாம், கொக்கொகோலாவும் குடித்தது” என்று சொல்லுவோம் என்று எதிர்ப்பார்க்கலாமா.. நமக்கு சூடு.. சுரணை இருக்கின்றது.. கையோடு அதிக ஞாபக மறதியும் உண்டு.. இன்னும் இரண்டு வாரத்தில் இந்த பிரச்சனையை மறந்துவிடுவோம் என்று அவருக்கும் தெரியும்.. இல்லாமலா அவர் ஜெயித்து பதவிக்கு வந்திருப்பார்…
ஒருசில நண்பர்கள் நம்ப பிள்ளைகளை எதற்கு தேசிய பள்ளிக்கு அனுப்பனும் தமிழ் பள்ளிக்கு அனுப்புங்க என்று ஆதங்கப்படுகிறார்கள். வரவேற்கிறேன். ஆனால் 6 ஆம் வகுப்பு முடிந்ததும் மேற்கொண்டு படிக்க அங்குதானே போயாகவேண்டும்! எங்குபோனாலும் போவது கற்பதர்க்குதான். ஆனால் முறைகேடான நடத்தையாலேயே நாம் வருந்துகிறோம். தட்டிகேட்க சென்ற தமிழன், அமைச்சர் நம்ம காதுக்கு பூ சுத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது.
ஒரு சிலர் தமிழ் பள்ளிக்கு அனுப்பினால் இந்த பிரிச்சனை வராது என்று ஆதங்கம் சொல்கிறார்கள். 6-ஆம் வகுப்பு முடிந்தவுடன் எந்த தமிழ் இடைநிலை பள்ளிக்கு அனுப்ப போறிங்க நித்ரா அவர்களே! இங்கே பிரிச்சனை தமிழ் பள்ளி அல்லது தேசிய மலாய் பள்ளி அல்ல. அதை நல்ல முறையில் அதிலும் மற்ற இனங்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் தேவை. இங்கு சத்து மலேசியா கோட்பாடு செத்து விட்டது. இப்படி பட்ட இன வெறி கொண்ட ஆசிரியர்களை பதவி மற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது வேறு பள்ளிக்கு மற்றம் செய்யப்பட வேண்டும். இதை செய்யத் தவறினால் இந்த மாதிரி வேதாளங்கள் மறுபடியும் முருங்கை மரம் ஏறி நமக்கு தொல்லைகள் கொடுக்கும்.
இதுக்கு காரணம் பெ.ஆ.ச.தான். நல்லா ஜால்ரா!