பினாங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் மோசமாக நடத்தப்பட்டதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சு விசாரித்துக் கொண்டிருக்கிறது.
செபராங் ஜெயா மருத்துவமனையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கவே கூடாது என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி மேலவையில் யாஹ்யா கூறினார்.
“நோயாளிகள் இளையோர்களாக இருந்தாலும் ஏழை அல்லது பணக்காரராக இருந்தாலும் ஏன் எதிரிக்குக் கூட ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர்களுக்கான சாசனத்தில் கூறப்பட்டுள்ளதும் அது தான்.”
“நோயாளி மீது கோபத்தைக் காட்டியிருக்கக் கூடாது,” என அவர் செனட்டர் மாஷித்தா இப்ராஹிம் எழுப்பிய துணைக் கேள்விக்கு டாக்டர் ஹில்மி பதில் அளித்தார்.
இதற்கு முன்னர் மாஷித்தா செபராங் ஜெயா மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவரை மோசமாக நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி வினவியிருந்தார்.
இந்த நாட்டில் படித்த மேதைகளுக்கு எல்லாம் என்ன நடந்து கொண்டிருக்கிறது . ஓ இதைதான் படித்த முட்டாள் என்பார்களோ ?.மருத்துவர்களை கடவுள் என்று சொல்வார்கள் இவர்களுமா ,இதை வைத்து பார்க்கும் பொழுது மனித நேயம் அழிகிறது என்று தான் தோன்றுகிறது.