என் தர்மேந்திரனின் போலீஸ் தடுப்புக் காவல் மரணத்தில் சந்தேகிக்கப்படும் நான்காவது நபரான இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
‘குறிப்பிட்ட சில தரப்புக்களைப் பாதுகாப்பதற்காக’ தாம் அந்த விவகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
மே 21ம் தேதி தர்மேந்திரன் மரணத்துக்குப் பின்னர் ஜுன் முதல் தேதி ஹரி கிருஷ்ணன் கொடுத்த போலீஸ் புகாரில் அந்தத் தகவல் அடங்கியுள்ளது.
ஜுன் முதல் தேதி என்பது அந்த இன்ஸ்பெக்டர் தலைமறைவானதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாகும்.
மோசமாகத் துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து தர்மேந்திரன் மரணமடைந்த தினத்தன்று ஹரி கிருஷ்ணன் டாங் வாங்கி போலீஸ் லாக்கப்பில் கூட இல்லை என்றும் மலேசியகினிக்கு கிடைத்த அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சண்டை எனக் கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் 31 வயதான
தர்மேந்திரன் கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்குப் பின்னர் போலீஸ் சிறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதால் அவர் மரணமடைந்தார் என போலீசார் தொடக்கத்தில் கூறிக் கொண்டனர்.
ஆனால் சவப் பரிசோதனையின் போது அவரது உடலில் 52 காயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ஹரி கிருஷ்ணன் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் ஜுன் முதல் தேதி இரவு 7 மணிக்கு புகார் செய்துள்ளார்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத்தின் கீழ் அந்தப் புகார் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் கோலாலம்பூர் துன் எச்எஸ் லீ போலீஸ் நிலையம் அதனை விசாரித்து வருகின்றது.
கினிடிவி தொடர்பு கொண்ட போது ஹரி கிருஷ்ணனுடைய புகார் கிடைத்துள்ளதை போலீஸ் உறுதி செய்தது.
தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை
நான்காவது நபருக்கு சோறுதான் சாப்பிட தெரியும் வேற என்ன தெரியும்