ஜைரில்: துணை அமைச்சர் மடிக்கணினி குறித்து தவற விட்ட விஷயம்

laptopsChromebooks எனப்படும் மடிக்கணினிகளை அரசாங்கம்   கொள்முதல் செய்வதற்கான செலவுகள் பற்றி இரண்டாவது கல்வித் துணை அமைச்சர் பி  கமலநாதன் தெரிவித்துள்ள கருத்துக்களை டிஏபி தலைவர் ஜைரில் கிர் ஜொஹாரி  குறை கூறியிருக்கிறார்.

laptops1YTL Communications Sdn Bhd என்ற நிறுவனத்திடமிருந்து அந்தப் பள்ளிக்கூட  மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்படுவதை இந்த வாரத் தொடக்கத்தில் அளித்த  பேட்டி ஒன்றில் தற்காத்துப் பேசிய கமலநாதன் முக்கியமான விஷயத்தை மறந்து
விட்டார் என ஜைரில் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கொள்முதல் செலவு குறைந்தது என கமலநாதன் அந்தப் பேட்டியில்  வலியுறுத்தியிருந்ததுடன்,” அதனைச் செய்வதற்கு ஒரே நபர் இருக்கும் போது ஏன்  இரண்டு அல்லது மூன்று பேரை அந்த வேலையைச் செய்யுமாறு கேட்க  வேண்டும்,” என்றும் கூறியிருந்தார்.

“சிறந்த விநியோகிப்பாளருக்கு அந்த வேலை கிடைப்பதை நான் எதிர்க்கவில்லை.  பில்லியன் கணக்கான ரிங்கிட் பொது நிதி சம்பந்தப்பட்டுள்ள ஒரு திட்டத்துக்கு-  வெற்றி பெற்ற வேட்பாளர் மட்டும் தான் சிறந்த தேர்வா என்பது தான்  என்னுடைய கேள்வி ஆகும்,” என ஜைரில் சொன்னார்.laptops2

மடிக்கணினி ஒன்றின் சில்லறை விலை குறைவாக இருக்கும் போது அரசாங்கம்  ஏன் மடிக்கணினிகளை தலா 1,255 ரிங்கிட்டுக்கு YTL -லிடமிருந்து வாங்க  வேண்டும் என ஜைரில் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார்.