டிஏபி: குளியலறை விவகாரம் ‘சட்டுபுட்டென்று’ முடிக்கப்பட்டிருக்கிறது

limகுளியலறை மாணவர்களுக்கான தற்காலிக சிற்றுண்டி நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் “சட்டுபுட்டென்று” முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

“உண்மை என்னவென்பதைத் தெரிந்துகொள்ள மலேசியர்கள் விரும்புகிறார்கள். அதன்பிறகுதான் இது இனம் அல்லது சமயம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்று கமலநாதன் கூறுவதை நம்புவார்கள்”,என்றாரவர்.

மார்ச் மாதத்திலிருந்து குளியலறை தற்காலிக சிற்றுண்டி நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்தது என்றால் அதை ஏன் பெற்றோருக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை எனவும்  பினாங்கு முதலமைச்சருமான லிம் வினவினார்.