செக்ஸ் வலைப்பதிவாளர்களான அல்வின் தான் -க்கும் விவியன் லீ-க்கும் தலா மொத்தம் 30,000 ரிங்கிட் ஜாமீனை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 10,000 ரிங்கிட் ஜாமீன் என நிர்ணயம் செய்யப்பட்டது.
ஜாமீனை அனுமதித்த நீதிபதி அஸ்மான் ஹுசின் மூன்று நிபந்தனைகளை விதித்தார். அவர்களுடைய பாஸ்போர்ட்டுக்களை தடுத்து வைப்பது, சமய. இன உணர்வுகளைத் தூண்டக் கூடிய விஷயங்களை அவர்கள் இணையத்தில் சேர்க்கக் கூடாது,
ஒவ்வொரு மாதம் முதல் தேதியும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகளாகும்.
அவர்கள் செய்தது தவறுதான்.. ஆனாலும் நமது நீதித்துறை யானை தடவிய குருடன் போலதான்.. இவர்கள் குறை மட்டும் தான் தெரிந்திருக்கின்றது.. முட்டாள்கிப்லி நோர்டின்.. பெருச்சாளி அலி எல்லாம் நீதிமான்கள்.. முழு பூசனிக்காயை கரிபாப் பில் மறைக்கிறார்கள்..