‘புரொஜெக்ட் ஐசி’மீது பார்டி பெர்சத்து சாபா(பிபிஎஸ்) , அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹ்மாட் படாவியிடமும் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தது. ஆனால், புகாரின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தில் பிபிஎஸ் உதவித் தலைவர் ரடின் மல்லே இவ்வாறு கூறினார்.
2007-இல், பிபிஎஸ் பேராளர் குழு ஒன்று அதன் தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் தலைமையில் பிரதமரைச் சந்தித்து மகஜர் கொடுத்தது என்றாரவர்.
அதற்குப் பலன் இருந்ததா என்று வினவப்பட்டதற்கு, “இன்றுவரை இல்லை”, என்று ரடின் பதிலளித்தார்.
உங்களை (சபஹான்) ஆட்சி பீடத்தில் இருந்து ஒழிப்பதுதனே மகாதீரின் வேலை? இன்னுமா புரியவில்லை? அரசாங்கம் மக்களுக்கு செய்த தேச துரோகத்தை, யார் கேட்க முடியும்? கேட்பவன் கைதுசெய்யப் படுவான்! தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ்!