13வது பொதுத் தேர்தல் மோசடிகள் மீதான விசாரணைக்கு பெர்சே இசி-யை அழைத்துள்ளது

ambiga13வது பொதுத் தேர்தல் மோசடிகள் மீதான மக்கள் பஞ்சாயத்து மன்றத்தில் பங்கு  கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) பெர்செ (சுதந்திரமான நியாயமான  தேர்தல்களுக்கான கூட்டமைப்பு) அழைத்துள்ளது.

தேர்தல் மோசடிகள் முறைகேடுகள் எனக் கூறப்படும் விஷயங்களை விசாரிப்பது  அந்த மன்றம் அமைக்கப்படுவதின் நோக்கமாகும். அவற்றுக்கான ஆதாரங்களை  அனுப்புமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த பஞ்சாயத்து மன்றம் இசி-க்கு விரைவில் அதிகாரப்பூர்வமான அழைப்பை  அனுப்பும் என ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான ஐவி ஜோஷியா கூறினார்.

செப்டம்பர் 18 தொடக்கம் 22 வரை அந்த மன்றம் கூடும் என பெர்சே இணைத்  தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.